ETV Bharat / state

காமராஜர் கைகாட்டிய இடம்.. ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் என்ன பயன்? - dam in Rasimanal - DAM IN RASIMANAL

P.R.Pandian: ராசிமணலில் அணை கட்டினால் 63 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலத்திற்கும் தண்ணீர் தர முடியும் என்று காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன்
காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 5:38 PM IST

தருமபுரி: ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் அணை கட்டுவது குறித்து, தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தென்னிந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில மூத்த விவசாயிகள் சங்கத் தலைவா் சாந்தகுமார் ஆகியோர் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், நேற்று இக்குழுவினா் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர் அளவிடும் பகுதி மற்றும் ராசி மணல் அணைக் கட்டும் இடத்திற்குச் சென்று, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அணை கட்டுவதற்காக அளவீடு செய்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளா் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாநாகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது.

சுமார் 22 லட்சம் ஏக்கர் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. மேட்டூர் அணையில் 93 டிஎம்சி தண்ணீர் நிரம்பியதும், மீதமுள்ள உபரி நீர் கடலுக்குச் செல்வதை தடுக்க ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில், தமிழக எல்லையில் தான் அணை கட்ட வாய்ப்புள்ளது. கர்நாடகத்திலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், மேட்டூர் அணை நிரம்பியதும் கடலுக்கு வீணாகச் சென்று கலப்பதை தடுக்க தமிழகத்தில் கூடுதல் அணை கட்டப்பட வேண்டும்.

இதற்கு ராசிமணல் சிறந்த இடம். ராசிமணலில் அணை கட்டினால் 63 டிஎம்சி வரை தண்ணீரைச் சேமிக்க முடியும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு பாசன நீரை கூடுதலாக விடுவிக்க முடியும் என்று கா்நாடக அரசு கூறுகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டினால் பாசனத்துக்கு திறந்துவிடப்படும் உபரிநீரும் கிடைக்காமல் போய்விடும்.

ராசிமணலின் வலதுகரை கா்நாடகப் பகுதி என்பதால், ராசிமணலில் அணை கட்டினால் பெங்களூரின் தண்ணீர் தேவைக்காக இந்த அணையிலிருந்து 10 டிஎம்சி வரை தண்ணீரை எடுத்துக் கொள்ள இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இங்கு செய்யப்படும் மின் உற்பத்தியை இரு மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அணையின் கட்டுமானம், நிா்வாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ராசிமணலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது பகுதி உள்ளது. அங்கு கர்நாடகா அணை கட்டினால் மொத்த உபரிநீரும் தமிழகத்துக்கு வராது, தமிழகம் அழிந்துபோகும். ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் அதிக அளவில் மரங்கள் இல்லை. வன விலங்குகள் நடமாடும் பகுதியும் இல்லை.

இங்கு அணை கட்டினால் அணையின் வலதுகரையில் இருந்து கர்நாடகா மாநில பகுதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும். இருமாநிலங்களும் இணைந்து மின் உற்பத்தி செய்து பங்கிட்டுக் கொள்ள முடியும். இதை, கர்நாடகா மாநில விவசாயிகள் குழுவினரிடம் இதை எடுத்துரைத்துள்ளோம். அடுத்த கட்டமாக கர்நாடகா மாநிலம் மாண்டியா அல்லது மைசூரில் இரு மாநில விவசாயிகளும் ராசிமணல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.

ராசிமணலில் கட்டும் அணை இரு மாநில நிலப்பரப்பிலும் அமையும் பொதுவான இடம். இந்த இடத்திலிருந்து பெங்களூர் நகரத்திற்கு தேவையான குடிநீரும் 10 டிஎம்சி வரை வழங்கலாம். தண்ணீரைச் சேமித்து வைத்து மேட்டூர் அணைக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் தொடர்ந்து விட முடியும். ராசிமணலில் அணை கட்ட அரசிடம் வலியுறுத்தப்படும். இதற்கு இரு மாநில விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தனபாலை முதல்வராக்க அதிமுக தலித் எம்எல்ஏக்களே எதிர்த்தனர்” - திவாகரன் பரபரப்பு பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.