ETV Bharat / state

மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறையா? நத்தம் அருகே நடந்தது என்ன? - Makkaludan Mudhalvar Scheme - MAKKALUDAN MUDHALVAR SCHEME

Makkaludan Mudhalvar Scheme: நத்தம் அருகே அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் காரணமாக, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அவர்களின் கல்வி பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி
சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 5:18 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகளே மக்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்று தீர்வு அளிக்கும் திட்டமான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுகுடி, கோட்டையூர், ஆவிச்சிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான மனுக்கள் பெறும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.

சிறுகுடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த திட்டம் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி செயலரும், ஊரக வளர்ச்சித்துறை மண்டல அலுவலருமான வீரராகவன், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சிறுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால், பள்ளி வேலை நாளான இன்று அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து சிறுகுடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கூறியதாவது, அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வேலை நாட்களில் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறுவதால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஆகையால் இதுபோன்ற திட்டத்தை பள்ளி வேலை நாட்களில் நடத்தாமல் விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் எனவும், அல்லது திருமண மண்டபத்தில் நடத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பழனி உழவர் சந்தையில் கடைகளை ஒதுக்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு; அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.