திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் விக்னேஷ் மணிகண்டன் (40). இவர் தனக்குச் சொந்தமான காரை பழுதுபார்க்க ஒர்க் ஷாப்-க்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது சிஎஸ்ஐ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் பயங்கரமான சத்தத்துடன் தீப்பற்றியது.
இதனைக் கண்ட கார் உரிமையாளர் விக்னேஷ் மணிகண்டன் காரை நிறுத்தி தாவிக்குதித்து தப்பி ஓடினார். இந்நிலையில், காரில் மளமளவென பரவிய தீயால் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் வாகனங்களைச் சாலையில் நிறுத்தினர்.
இதனையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர், பற்றி எரிந்த தீயை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், வத்தலக்குண்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடையே கார் திடீரென தீப்பற்றி எரிந்தததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இளைஞர் பட்டப்பகலில் கொலை.. குற்றம் சாட்டபட்டவர் வீட்டில் தீ.. புதுக்கோட்டையில் பரபரப்பு!