சென்னை : தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது. தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை பரிந்துரை அறிக்கை ஆங்கிலத்தில் 550 பக்கங்களும், தமிழில் 600 பக்கங்களும் உள்ளன.
பரிந்துரைகள் :
- பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலின பன்முகத்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை அரவணைத்து தொடர்ந்து கல்வி கற்பது வாழ்க்கையின் நம்பிக்கையாக இருக்கும்.
- ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கவும், பெற்றோரைக் கையாளவும், அவர்களுடன் தொடர்பு கொண்டு, பாலினப் பாகுபாடு இல்லாமல் கல்வியை தொடர்வதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
- பாலினப் பாகுபாடு உள்ள குழந்தைகளைத் துன்புறுத்துதல் அல்லது கேலி செய்தல் போன்றவை நடத்தினால் அதன் மீது அதிக முன்னுரிமை அளித்து கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.
- கல்லூரிகளில் ராகிங் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
- திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கு பள்ளி, கல்லூரியில் படிப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உயர் வயது வரம்பு நீக்கப்பட வேண்டும்.
- திருநங்கைகளுக்கு ஏற்ற ஓய்வறைகள் மற்றும் பொதுவான அறைகளை உருவாக்க வேண்டும்.
- உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளில் போதுமான தண்ணீர், நாப்கின் பயன்பாடு, நாப்கின் எரியூட்டுதல் அல்லது அப்புறப்படுத்துவது ஆகிய வசதிகளும் இருக்க வேண்டும்.
- பள்ளிகளில் தற்பொழுது உள்ள நிலையை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம் உள்ளிட்ட பிற துறைகளை இணைத்து பள்ளிகளில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் துப்பரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பு செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் பாரமரிப்பு பணிகளை மாதந்தோறும் ஆய்வு செய்து மத்திய அளவில் சான்றிதழ் வழங்க வேண்டும்.
- பள்ளிகளில் குழந்தைகளை உடல் ரீதியாகவும், அறிவாற்றல் உள்ளவர்களாகவும் கவனித்துக் கொள்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரம் அரசின் அதிகாரத்துடன் உள்ளது.
- தரமான கற்பித்தல், கல்வியை வழங்குவதற்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறைகளை மாற்றியமைத்தல் ஆசிரியர் கல்வி, சேவையில் ஆதரவு மற்றும் தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்.
- தரமான கல்விக் கிடைப்பதற்கு பள்ளிகளில் தேவையான அளவிற்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
- ஆசிரியர்கள் வசிக்கும் பகுதிக்குள் பணியிடங்கள் இருக்கும் வகையில் நியமிக்கலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களிடம், மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஒய்வு பெற்ற நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mp_saminathan pic.twitter.com/YIrrrDASeI
— TN DIPR (@TNDIPRNEWS) July 1, 2024 - தொலைதூரத்தில் உள்ள பணியில் உள்ள ஆசிரியர்களின் இடமாறுதல் கேட்டால் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளும் பரிசீலிக்கலாம்.
- ஆசிரியர்களின் இடமாற்றம் வெளிப்படையானதாகவும், விதிமுறைகளுக்குப்பட்டும் இருக்க வேண்டும்.
- ஆசிரியர் - மாணவர் விகிதத்தின்படி போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை வழங்க வேண்டும்.
- நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போதுமான எண்ணிக்கை நியமித்து, கற்பித்தல் ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் தேர்வு முறையை மேம்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை செய்த திமுக கவுன்சிலரின் கணவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Illegal liquor sale