ETV Bharat / state

கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்! - madras race club seal issue - MADRAS RACE CLUB SEAL ISSUE

Tamil Nadu seals Madras Race Club: கிண்டி ரேஸ் கிளப்புக்கு செல்லும் மூன்று நுழை வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 4:27 PM IST

சென்னை: வாடகை பாக்கி தொகை 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. அப்போது நீதிமன்றம், குத்தகை ரத்து செய்ததும், காலி செய்ய அவகாசம் வழங்காமல் சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தது.

முன்னதாக, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 267 கிலோ தங்கம் கடத்தல்; சென்னை ஏர்போர்ட் சம்பவத்தில் இரண்டு பேர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது..!

இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, கிளப் நுழைவாயிலில் அரசு வைத்த சீல் அகற்றப்படவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர், கிளப்புக்கு செல்லும் மூன்று நுழை வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுவிட்டதாக விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், உத்தரவாதத்தை மீறியிருந்தால் அதுசம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும், முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.