ETV Bharat / state

30க்கும் மேற்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - 37 Tamil Nadu Fishermens Arrested

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல், நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் (செப்.20) இரவு 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என 37 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (செப்.21) நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகுகளையும், அதிலிருந்த 37 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர் சம்பவம் குறித்து மீனவ கிராமங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல், நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: "பாஜகவின் பி டீம் பகுஜன் சமாஜ் கட்சி..மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது" - கரூர் எம்பி ஜோதிமணி!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மீனவர்களை கைது செய்வது, மீனவர்களைத் தாக்குவது, மீனவர்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அனைத்து வழிகளிலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.

இதனால், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசின் அட்டகாசமும், அத்துமீறலும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இவை இனியும் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.