ETV Bharat / state

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 9:35 AM IST

Madurai news: மதுரையில் நாளை திறக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா

மதுரை: அலங்காநல்லூர் அருகே நாளை திறக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு, நேற்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தின் திறப்பு விழா, ஜனவரி 24ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில், மதுரை மாநகரிலுள்ள தமுக்கம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறு தழுவுதல் அரங்கத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக கலைச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலைச் சுற்றுலாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலைமாமணி கோவிந்தராஜன் கலைக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மயிலாட்டம், துறவியாட்டம், கரகாட்டம், பறையாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில், மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையம் சார்பாகவும், ஐயப்பன் கலைக் குழுவினர் சார்பாகவும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோருடன் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுக.. முக்கிய குழுக்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.