ETV Bharat / state

நெல்லை நீட் பயிற்சி மையம் விவகாரம்; உரிமையாளரைத் தேடுவதில் தனிப்படை தீவிரம்! - NEET COACHING CENTRE ISSUE

நெல்லை தனியார் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய வழக்கில் பயிற்சி மையத்தின் உரிமையாளரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சி மற்றும் நீட் அகாடமி உரிமையாளர் ஜலாலுதீன்
மாணவர்கள் தாக்கப்பட்ட காட்சி மற்றும் நீட் அகாடமி உரிமையாளர் ஜலாலுதீன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 1:22 PM IST

திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அதேபோல், மாணவிகளின் முகத்தில் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், சம்பந்தப்பட்ட நீட் அகாடமியில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் அதிகரிக்கும் போதை ஊசி புழக்கம்? இளம்பெண்கள் கைதானதன் பின்னணி என்ன?

ஆனால், அப்போது மாணவர்களை தாக்கிய அகாடமி உரிமையாளர் ஜலாலுதின் அங்கு இல்லாததை அடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டார். மேலும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்றும் கண்ணதாசன் கூறியிருந்தார்.

இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, அகாடமி உரிமையாளர் ஜலாலுதீன் அகமது வெட்டியாடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனவே, நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஜலாலுதீன் தேடப்பட்டு வருகிறார்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமாரை ஈடிவி பாரத் தரப்பில் தொடர்பு கொண்ட போது, "இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, அதனை பாலோஅப் செய்து வருகிறோம். தனிப்படைகள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.