ETV Bharat / state

தேர்தல் தேதி அறிவித்தால் பொன்முடி பதவியேற்பில் சிக்கலா? - சபாநாயகர் அளித்த விளக்கம்

Speaker Appavu: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் பொன்முடி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆளுநர் டெல்லியில் இருந்து வந்த பின்பு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி பதவியேற்பில் சிக்கல் இருக்காது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 11:29 AM IST

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி பதவியேற்பில் சிக்கல் இருக்காது

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில், மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு, இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப்பெற்றது. இதனையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். ஆனால், தமிழக ஆளுநர் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பதில் சிக்கல் வருமா? மக்களவை தேர்தல் வந்துவிட்டால் பதவியேற்க முடியுமா? என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று (வியாழன்) சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்வதை தவிர்ப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லி சென்றாரா என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே, திட்டமிட்டப் பணிகளுக்காக டெல்லி சென்றிருப்பார். டெல்லியில் இருந்து வந்தப் பின்பு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் வருமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், 'நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சர் பதவி ஏற்புக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. முதலமைச்சர் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து ஆளுநருக்கு கடிதம் அனுப்புகிறாரோ, அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஆளுநர் நியமிப்பார். இதுதான் நடைமுறை. அதில் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. அங்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தேர்தல் அறிவித்து, தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட குருமூர்த்தி சிங் என்பவர் மரணமடைந்தார்.

இதனால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, பிற தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கரன்பூர் தொகுதியில் போட்டியிட இருந்த பாஜக வேட்பாளர் சுரேந்தர் சிங்கிற்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதாவது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. சுரேந்தர் சிங் வேட்பாளராக மட்டுமே இருக்கிறார். இத்தகைய சூழலில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எனவே, இங்கும் தேர்தல் தேதி அறிவித்தாலும் பதவி பிரமாணம் செய்து வைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள நடைமுறைதான், அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும்' இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: “ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?” - பிரதமரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.