ETV Bharat / state

"கோவை தொகுதியில் அண்ணாமலை”.. நழுவிச் சென்ற எஸ்.பி.வேலுமணி! - SP Velumani about Annamalai - SP VELUMANI ABOUT ANNAMALAI

AIADMK Ex Minister SP Velumani: கோயம்புத்தூருக்கு 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் திமுக கொண்டு வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

aiadmk-former-minister-sp-velumani-said-dmk-no-project-has-been-brought-in-coimbatore-for-past-3-years
கோவையில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை - எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 8:55 PM IST

கோவையில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை - எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

கோயம்புத்தூர்: சென்னையில் இருந்து கோவை வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, “அதிமுக 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி. அதிமுகவிற்கு வெற்றி உறுதி. களத்தில் இருக்கும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி வேட்பாளர்கள் படித்தவர்கள். 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.

கோவை, நீலகிரி, திருப்பூர் மக்களவை வேட்பாளர்கள் இந்த பகுதிக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுப்பார்கள். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம். பல்வேறு சாலைகள், கல்லூரிகள் என ஏராளமான திட்டங்களை, வளர்ச்சியை கோவைக்கு கொடுத்துள்ளோம். மூன்றாண்டுகளாக எந்த திட்டத்தையும் திமுக இங்கே கொண்டு வரவில்லை. மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கத் தெளிவாக இருக்கின்றனர்.

மூன்று மக்களவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல், 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம். இந்த வெற்றி, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுத் தரும். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கின்றது. ஆனால், கோவை மாவட்டத்திற்கு திட்டங்கள் தந்ததெல்லாம் அதிமுக தான்.

பெட்ரோல், டீசல் விலையைப் பற்றி எல்லாம் திமுக பேசக்கூடாது. எந்த வாக்குறுதியும் இந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றவில்லை. அதிமுக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றும். திமுகவின் 38 எம்பிக்கள் எதுவும் செய்யவில்லை. அதனால் அதிமுகவிற்கு வெற்றி உறுதி, சொன்னதைச் செய்யக்கூடிய கட்சி அதிமுக” என்றார்.

தொடர்ந்து, கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் சொல்வதை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தவிர்த்து விட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த எஸ்.பி. வேலுமணிக்கு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கை ராமச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உட்பட கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! - AIADMK Election Manifesto

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.