சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையும், 14ஆம் தேதி பொங்கல், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிமாநிலங்களிலும் பணியாற்றுபவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கிப் பயில்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 12ஆம் தேதியும், ஜனவரி 11ஆல் பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 14ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகை பயணம்: டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12 முதல் தொடங்குகிறது!
— Southern Railway (@GMSRailway) September 9, 2024
ரயிலில் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.#பொங்கல்2025 #ரயில்டிக்கெட் #IRCTC #SouthernRailway pic.twitter.com/LeflNROmSv
அதேபோல, ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். மேலும், ஐஆர்சிடிசி செயலி வாயிலாக இணையத்திலும், ரயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பொங்கல் விடுமுறை பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "அந்த மனசுதான் சார் கடவுள்".. குப்பையில் கிடைத்த தங்கச் சங்கிலி.. தூய்மைப் பணியாளர் செய்த செயல்!