மதுரை: ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயிலானது, சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து (07355) புறப்பட்டு ஹவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவங்கரே, சிக்ஜாஜூர், பீரூர், அர்சிகெரே, துமகுரு, பானஸ்வாடி, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து (07356) ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர், பானஸ்வாடி, துமகுரு, அர்சிகெரே, பீரூர், சிக்ஜாஜூர், தாவங்கரே, ஹரிஹர், ராணிபென்னூர், ஹவேரி வழியாக திங்கட்கிழமை இரவு 7.25க்கு வந்தடையும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அந்தியோதயா ரயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்த போலி டி.டி.இ. சிக்கியது எப்படி? - antyodaya super fast express