சென்னை: சென்னையில் இருந்து கோவை, மைசூரு, புவனேஸ்வர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகளை ஏப்ரல் மாதம் வரை நீடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 8 சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களின் விவரம்: சென்னை- புபனேஸ்வர் இடைய வாராந்திர சிறப்பு ரயில் (திங்கட்கிழமை மட்டும்) பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 29 ஏப்ரல் வரை என 13 சேவைகளை நீடித்துள்ளது. இதே ரயில் மறுமார்க்கத்திலும் நீடிக்கபட்டுள்ளது.
சென்னை-கோவை இடைய வந்தே பாரத் ரயில்களை செவ்வாய்கிழமைகளில் சிறப்பு ரயில்களாக, பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27 பிப்ரவரி வரை 4 சேவைகளை நீடித்துள்ளது. மேலும், இந்த ரயில் மறுமார்க்கத்திலும் நீடிக்கபட்டுள்ளது.
சென்னை - மைசூரு இடைய வந்தே பாரத் ரயில்களை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில்களாக, பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 27 ஆம் தேதி வரை 8 சேவைகளாக நீடிக்கபட்டுள்ளது. இதேப்போல் மறுமார்க்கத்திலும் 8 சேவைகளாக நீடித்துள்ளது.
-
Southern Railway notified the service of the following special trains will be extended to run. Advance reservations for the above #SpecialTrains are open from #SouthernRailway end.#TrainServices #RailwayAlerts #RailwayUpdates #TrainTravel pic.twitter.com/hby0j1XCR6
— Southern Railway (@GMSRailway) January 31, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Southern Railway notified the service of the following special trains will be extended to run. Advance reservations for the above #SpecialTrains are open from #SouthernRailway end.#TrainServices #RailwayAlerts #RailwayUpdates #TrainTravel pic.twitter.com/hby0j1XCR6
— Southern Railway (@GMSRailway) January 31, 2024Southern Railway notified the service of the following special trains will be extended to run. Advance reservations for the above #SpecialTrains are open from #SouthernRailway end.#TrainServices #RailwayAlerts #RailwayUpdates #TrainTravel pic.twitter.com/hby0j1XCR6
— Southern Railway (@GMSRailway) January 31, 2024
இதேப்போல், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கபட்டு வந்த வந்தே பாரத் சிறப்பு ரயிலானது, வியாழக்கிழமைகளில் மட்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை 9 சேவைகளாக நீடிக்கபட்டுள்ளது. இதேப்போல் 9 சேவைகளாக மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை இடைய நீடிக்கபட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி!