தென் சென்னை: தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை விட 1,80,541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | தமிழச்சி தங்கபாண்டியன் | திமுக | 4,41,931 |
2 | தமிழிசை செளந்தரராஜன் | பாஜக | 2,54,887 |
3 | ஜெயவர்தன் | அதிமுக | 1,45,946 |
4 | தமிழ்செல்வி | நாதக | 69,533 |
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜெயவர்தனும், பாஜக வேட்பாளராக, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டுள்ளனர். தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்ச்செல்வி களம் கண்டுள்ளார்.
தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
- தென் சென்னையை பொருத்தவரை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் மாலை 3 மணி நிலவரப்படி அவர், 12,9405 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 40763 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 84964 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 42197 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கை தொடந்து நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 79,355 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 50,885 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26,110 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
- முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 11,25,857 (59.06%) வாக்குகள் பதிவாயிருந்த நிலையில், இம்முறை தென்சென்னை தொகுதியில் 10,96,026 (54.17%) வாக்குகள் பதிவாகிருந்தன. தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை சௌந்தராஜன் தென்சென்னையில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தல் களம்: திமுக வேட்பாளராக களமிறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் மட்டுமே 50.15 சதவீதம் வாக்குகளை (5,64,872 வாக்குகள்) அள்ளினார். 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் 26.87 சதவீத வாக்குகளை (3,02,649) பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான ஆர்.ரங்கராஜன் 12.02 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஏ.ஜெ.ஷிரைன் 4.45 சதவீதம் ஓட்டுகளையும் பெற்றனர் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: தேர்தல் 2024: தென்சென்னையில் வெற்றி வாகை சூடப்போவது யார்? - South Chennai Constituency - LOK SHABA ELECTION RESULT 2024