ETV Bharat / state

போட்டுத்தள்ள பெரிய தொகை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்கள் முடக்கம்? - armstrong murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 1:42 PM IST

armstrong murder accused assets: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ம்ஸ்ட்ராங், கைதான அஞ்சலை, மலர்க்கொடி (கோப்புப்படம்)
ஆர்ம்ஸ்ட்ராங், கைதான அஞ்சலை, மலர்க்கொடி (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்தனர்.

இதையடுத்து மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆர்ம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ரவுடி தோட்டம் சேகரின் மனைவி மலர்கொடிக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹரிதரன் ஆகியோரை இதுவரை செம்பியம் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.

மேலும், சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், முகிலன், மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்த கும்பலுக்கு சம்போ செந்தில் பணம் வழங்கியது தெரியவந்துள்ளது. முகிலன், விஜயகுமார் விக்னேஷ் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், சம்போ செந்திலிடம் பணம் பெற்றுக் கொண்டு, நாட்டு வெடிகுண்டுகளை ஹரிஹரனிடம் வழங்கியது தெரிய வந்தது.

மேலும், பணப்பரிவர்த்தனை, நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்த மேலும் சிலரையும் காவல்துறை தேடி வருகின்றனர். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்காக பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என ஆய்வு செய்து கணக்கிட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் பெரும் பணம் பரிமாற்றம் நடைப்பெற்று இருக்கலாம் என காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நேரலையில் தற்கொலை முயற்சி.. கைது செய்யப்படுவாரா பிரியாணி மேன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.