தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வேட்பாளராக பி.எஸ்.மோகன் போட்டியிட்டார். அவர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் போட்டியிட்டு, 3,91,048 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.
அதன் பிறகு நடைபெற்ற 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி அமைந்தது. அப்போது பாமக சார்பில் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். இதனால், இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. தற்போது மீண்டும் அதிமுக, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளது.
அதிமுக சார்பில் இத்தொகுதியில் தருமபுரி நகரச் செயலாளர் பூக்கடை ரவியின் மகன், மருத்துவர் அசோகன் போட்டியிடுவார் என சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
யார் இந்த அசோகன்?: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பூக்கடை ரவி, அதிமுகவில் பிரபலமான நபராகவும், தருமபுரி அதிமுக நகரச் செயலாளராகவும் இருக்கிறார்.
வேப்டாளராக அறிவிக்கப்பட்டுள்ள அசோகனி தாயார் ராஜாத்தி, தருமபுரி நகராட்சி 33வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். இதனையடுத்து, இவருக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?