ETV Bharat / state

சொத்து பிரச்னையால் தந்தையை கேஸ் சிலிண்டரால் தாக்கி கொலை செய்த மகன்! - Chennai Crime news - CHENNAI CRIME NEWS

Chennai Crime news: சொத்து பிரச்னை காரணமாக, தந்தையை மகன் கேஸ் சிலிண்டரால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடன் தொல்லையால் இரும்பு வியாபாரி தற்கொலை
சென்னை குற்றச்செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 5:46 PM IST

சென்னை: சென்னை, முத்தியால்பேட்டை பிடாரி கோயில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (63). வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரம் செய்யும் கடை நடத்தி வரும் இவர், தன்னுடைய வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் தவணையாக கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரும்பு வியாபாரத்தில் நஷ்டமானதால், கடந்த ஆறு மாத காலமாக வங்கிக்கு தவணை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கியில் பெற்ற கடனுக்கு தவணையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் தொடர்ந்து இருதயராஜ்-க்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருதயராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த இருதயராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து பிரச்சனையில் தந்தையை கேஸ் சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன்!

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம், பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (64). கூலி வேலை செய்து வரும் இவர் மீது காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார்.

இவரது நான்காவது மகனான ஜார்ஜ்புஷ் என்பவருக்கும், இவருக்கும் இடையில் சொத்து பிரிப்பதில் தொடர்ந்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் சொத்துக்களை பிரிப்பதில் தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ்புஷ், அவரது தந்தையை வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரால் தாக்கியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, ஜார்ஜ்புஷ் சகோதரர்கள் ஆத்திரமடைந்து, ஜார்ஜ்புஷ்ஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த ஜார்ஜ்புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பு; ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கெடு! - RN Ravi Vs TN Govt

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.