ETV Bharat / state

மனைவிக்கு பதில் மாமனாரைக் கொன்ற மருமகன் கைது.. தஞ்சையில் பரபரப்பு! - son in law killed father in law - SON IN LAW KILLED FATHER IN LAW

Thanjavur murder: தஞ்சையில் மனைவியைக் கொலை செய்யச் சென்ற இடத்தில் மாமனாரைக் கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம்
கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 9:34 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், கடந்த மே 14ஆம் தேதி அவரது வீட்டின் குளியலறையில் வாயில் துணி வைத்த நிலையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது மூத்த மகள் மனோ ரம்யா, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் பெயரில் வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில், ராஜ மனோகரனின் மூத்த மகள் மனோ ரம்யா திருமண தகவல் மைய செயலி மூலம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமாலுரைச் சேர்ந்த ராஜ்குமாரை (43) காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், தனது மனைவியை கொல்ல திட்டம் போட்டுள்ளார்.

இதன்படி, அவரது நண்பரான சரவணகுமாருடன் மே 16ஆம் தேதி வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து, மனோ ரம்யாவை கொல்ல காத்திருந்துள்ளார், ஆனால், மனோரம்யா குளிக்க வராமல் அவரது தந்தை ராஜ மனோகரன் குளிக்க வந்ததால், என்ன செய்வது என்று தெரியாத ராஜ்குமார், அவரது வாயில் துணியை வைத்து கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராஜ்குமார் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பால்கனியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை.. காரணம் இதுவா? - Balcony Viral Video Mother Suicide

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.