ETV Bharat / state

சீரழியும் மதுரையின் பொக்கிஷம் புல்லூத்து - காப்பாற்ற முன்வருமா மாவட்ட நிர்வாகம்? - Madurai Pulluthu Falls - MADURAI PULLUTHU FALLS

மதுரைக்கு அருகே பல்வேறு வகையான உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் நிறைந்துள்ள புல்லூத்து பகுதி அண்மைக்காலமாக மது பிரியர்கள் மற்றும் நெகிழிப் பயன்பாடுகளால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதாகவும், மதுரை மாவட்ட நிர்வாகம் இதனைப் பாதுகாக்க முன் வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை புல்லூத்து அருவி
மதுரை புல்லூத்து அருவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 5:07 PM IST

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் துவரிமான் வழியே சோழவந்தான் செல்லும் சாலையில் நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது புல்லூத்து. இங்குள்ள ஊற்று பல்வேறு மூலிகைத் தாவரங்களின் வேர்களிலிருந்து சுரந்து வருவதால் மருத்துவ குணம் மிக்கதாகக் கருதப்படுகிறது. அமர்ந்து நீராடுவதற்கு ஏற்ற வகையில் கருங்கல்லால் தொட்டி கட்டி, தூம்பு அமைக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் விழும் வகையில் 400 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதி, சுற்றுலாவுக்கு ஏற்ற மிகப் பாதுகாப்பான இடமும்கூட. மதுரை பண்பாட்டு சூழலியல் பேரவையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் புல்லூத்துப் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின் மூலமாக, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, கரடி, மரநாய், புனுகுப்பூனை, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, உடும்பு, கீரி உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மதுரை புல்லூத்து அருவி சீர்கேட்டை தடுக்க மக்கள் கோரிக்கை (Credit - ETV Bharat Tamil Nadu)

பல்வேறு வகையான பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனவற்றுடன் தேன் பருந்து, ராசாளி பருந்து, கரும்பருந்து, ஓணான் கொத்திக் கழுகு, புறா, மயில், பல்வேறு வகையான குருவிகள் உள்ளிட்ட 38 வகை பறவையினங்களும், 50 வகையான வண்ணத்துப்பூச்சியினங்களும் உள்ளதாகவும் அந்த அமைப்பு இருப்பதாகப் பட்டியலிட்டுள்ளனர். மேலும், இந்தப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர் சூழல் மிக்கதாகும் என மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையும் அவ்வமைப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு வகையான நெகிழிப்பொருட்கள், பாட்டில்கள் மற்றும் மது பிரியர்களால் இப்பகுதி கடும் சூழலியல் சீரழிவுக்கு ஆளாகியுள்ளது. இதனைத் தடுத்து இப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முன் வைத்துள்ளனர்.

நாகமலை அடிவாரத்தில் உள்ள தெலசால் இளைஞர் நகரின் அருட்சகோதரர் பன்னீர்செல்வம் கூறுகையில், "எங்கள் இளைஞர் நகரத்தில் தொழிற் கல்வி பயிலும் மாணவர்களை அழைத்து வந்து புல்லூத்து பகுதியில் தூய்மைப் பணி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதையும் படிங்க: மறைந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம்.. மதுரைக்கார மகனின் நெகிழ்ச்சி சம்பவம்!

ஆனால், அதையும் மீறி இங்கு பொதுமக்கள் மற்றும் மது பிரியர்களால் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகளால் தண்ணீர் செல்லும் பாதை முற்றிலுமாக அடைபட்டு அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது. இங்குள்ள தண்ணீரை பொதுமக்கள் தீர்த்தமாகவும் புனிதமாகவும் கருதி பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் இப்பகுதியைத் தூய்மையாகப் பாதுகாப்பதும் பேணுவதும் அவசியம்" என்று கூறினார்.

அப்பகுதியில் குடியிருக்கும் பொறியியல் பட்டதாரி பிரேம்குமார் கூறுகையில், "நான் பிறந்து வளர்ந்தது புல்லூத்தை ஒட்டிய இந்த மலையடிவாரத்தில்தான். தூய்மையான இந்தத் தண்ணீர் மருத்துவ குணம் மிக்கது. ஆகையால் மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். தாங்கள் கொண்டு வருகின்ற பிளாஸ்டிக் கழிவுகளையும் இங்கேயே போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

மக்கள் புனிதமாகக் கருதுகின்ற நீர் விழும் தூம்புப் பகுதியின் மேற்புறத்தை மது பிரியர்கள் தாங்கள் குடித்துக் கும்மாளம் போடும் பகுதியாக மாற்றிவிடுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அருகிலுள்ள இளைஞர் நகர் நிர்வாகத்தால், பாதுகாப்பு வளைவு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், அதையும் செயல்படுத்தவிடாமல் செய்துவிட்டனர். சுருளி, குமுளி போன்ற பகுதிகளில் வனத்துறை தடுப்பு ஏற்படுத்தி கட்டுப்பாடுகளோடு பொதுமக்களை அனுமதித்து வருவது போல் இங்கும் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மதுரை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும், ஊராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மதுரையைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் கூறுகையில், "என் தந்தையார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தபோது, இந்தத் தண்ணீர்தான் அவருக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆகையால், நாங்கள் வாரம் ஒரு முறை இங்கு வந்து இரண்டு கேன்களில் தண்ணீர் பிடித்துச் செல்வோம். அந்தப் பழக்கம் என்னுடைய சிறுவயதிலிருந்து தற்போது வரை தொடர்கிறது.

ஆனால், அண்மைக்காலமாக இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் பாழாகி வருகிறது. முன்பெல்லாம் மான், குரங்கு போன்றவற்றை மிக அருகிலேயே பார்ப்போம். தற்போது அவை அரிதாகிவிட்டன. சீரழிவு அதிகரித்து வருவதால், உடனடியாக இதனைச் சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். அப்போதுதான் புல்லூத்துப் பகுதியின் பல்லுயிர்ச்சூழலை பாதுகாக்க முடியும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.