ETV Bharat / state

குறட்டைக்கு குட் பை.. தஞ்சை அரசு மருத்துவமனையில் "உறக்க ஆய்வகம்" தொடக்கம்! - sleeping lab at Thanjavur GH

Sleeping lab at Thanjavur GH: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக உறக்க ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்ற மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:54 PM IST

Updated : May 22, 2024, 4:04 PM IST

உறக்க ஆய்வகம் புகைப்படம்
உறக்க ஆய்வகம் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக உறக்க ஆய்வகம் தொடங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், "தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி (Bronchoscopy) என்ற மூச்சுக்குமாய் உள்நோக்கி கருவியும், உறக்க ஆய்வகமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிறைய பேருக்கு உடல் பருமன் காரணமாக குறட்டை சத்தம் உருவாகி தூக்கமின்மை நோய் ஏற்படும். இதனால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான பரிசோதனைக் கூடமாக உறக்க ஆய்வகம் செயல்படும். இரவு நேரத்தில் தூங்கும்போது தொண்டையில் சதை வளருதல், உடல் பருமன் அல்லது வேறு காரணங்களால் உடலில் மாறுபாடு தெரியும். இப்பிரச்னை காரணமாக அவர்களது பகல் நேர செயல்பாடு குறைதல், இரத்த அழுத்தம், சர்க்கரை சத்து பிரச்னைகள் உருவாகும்.

இதை பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவதற்கும், பரிசோதனையின்போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கண்காணிப்பதற்கும், முதல் முறையாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறக்க ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இது இலவசமாக செய்யப்படும். இந்தப் பரிசோதனை இரவு நேரத்தில் தூங்கும்போது மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இந்த பரிசோதனையில் குறட்டை வரும் போது உடலில் ஏற்படும் மாற்றம், ஆக்ஸிஜன் அளவு குறைவது, இதயத்தில் மாறுபாடு போன்றவை 6 மணி நேரத்திற்கு பதிவாகும். இதனால் ஒரு நாளைக்கு ஒருவருக்கு மட்டுமே பரிசோதிக்க முடியும். இந்த பரிசோதனை தஞ்சாவூரில் வேறு எங்கும் கிடையாது.

அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை சென்னை, மதுரைக்கு அடுத்து தஞ்சாவூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டை, மூச்சுக்குழாயில் மட்டன், கோழி எலும்பு, மீன் முள், கொக்கிகள் போன்றவை சிக்கிக் கொண்டால் எடுப்பது சிரமம். இதை மூச்சுக்குமாய் உள்நோக்கி கருவி மூலம் வீடியோ திரையில் பார்த்துக் கொண்டே தொண்டை, மூச்சுக்குழாயில் சிக்கியதை சேதாரம் ஏற்படாமல் எடுத்துவிட முடியும்.

இது தவிர மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய சாதாரண கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் போன்றவற்றையும் கண்டறியலாம். இந்தப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.10 ஆயிரம் செலவாகும். இதை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், நுரையீரல் மருத்துவப் பிரிவு தலைவர் மருத்துவர் அன்பானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: "5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம்" - எப்போது துவக்கம்? - Thayumanavar Scheme

Last Updated : May 22, 2024, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.