ETV Bharat / state

கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை.. 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது! - Drug Tablets selling in Chennai

Drug Tablets selling in Chennai: கோயம்பேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த குற்றத்திற்காக, 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் புகைப்படம்
கைதானவர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 8:55 AM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அதில், ரயில் மூலம் மும்பைக்குச் சென்று அங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த மாணிக்கம்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரைகள் (File Image)
போதை மாத்திரைகள் (File Image) (Credits - ETV Bharat Tamil Nadu)

அதைத்தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கோயம்பேடு பகுதிகளில் மாணவர்களைக் குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதும், இதற்காக மும்பைக்கு சுற்றுலா செல்வது போல, பணம் செலவழித்துச் சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் வெளியான தகவலின் அடிப்படையில், இதில் தொடர்புடைய கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அரிஷ்(35), விஜயகுமார் (என்ற) கிழிந்த வாய்(22), அஜய்(22), கோகுல்(21) உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி, இவர்கள் செல்போனில் குழு அமைத்து அதில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிரடியாக நடந்த என்ஐஏ சோதனை.. இருவர் கைது - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.