ETV Bharat / state

கிருஷ்ணகிரி பள்ளி சிறுமிகள் பாலியல் தொல்லை விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று முதல் விசாரணை! - Krishnagiri students Sexual abuse - KRISHNAGIRI STUDENTS SEXUAL ABUSE

SIT starts Investigation on Krishnagiri students Sexual Abuse Issue: கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் என்ற பெயரில் மாணவிகளை பாலியல் வன்முறை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று முதல் 2 நாட்களுக்கு விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 10:44 AM IST

சென்னை: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்முறை அளிக்கப்பட்ட விவகாரத்தில், 15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவே கிருஷ்ணகிரிக்கு விரைந்தனர். இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியுடன் ஆலோசனை நடத்திவிட்டு, இரண்டு நாட்கள் அங்கே முகாம் அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.

அதாவது, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார்ப் பள்ளி பயிற்சி முகாமில் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும், போலீசார் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்திடவும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்து பரிந்துரைகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, 15 நாளில் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவில், சமூக நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், தேர்வுத்துறை இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர் பூர்ண சந்திரகா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த குழுவினர் நேற்று இரவு கிருஷ்ணகிரிக்கு சென்றனர். இன்று இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் குழுவினர் விரிவான ஆலோசனையை நடத்துகின்றனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்கள் அங்கே தங்கி இருந்து நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்திய பிறகு சென்னை திரும்பும் குழுவினர், பரிந்துரை அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பிக்க உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இரு மாநில போலீசாரை விழிபிதுங்க வைத்த அசாம் சிறுமி.. கேரளாவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.