ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்த ஏழு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர் - Tamil Nadu fishermen - TAMIL NADU FISHERMEN

Tamil Nadu fishermen: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

தாயகம் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் புகைப்படம்
தாயகம் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 10:09 AM IST

சென்னை: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏழு மீனவர்களை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அதிகாலை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனிடையே, இலங்கை நீதிமன்றம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்கள் பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதோடு 7 மீனவர்களுக்கும் தூதரக அதிகாரிகள், விமான டிக்கெட்களும் ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வந்த தனியார் பயணிகள் விமானத்தில் 7 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 7 பேரையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... புதுக்கோட்டை மீனவர்கள் ஒன்பது பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.