சென்னை: காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தேசிய அளவில் எதிரணியை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,
திருவள்ளூர் தனித்தொகுதி - சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி - கோபிநாத்
கரூர் - ஜோதிமணி
கடலூர் - விஷ்ணு பிரசாத்
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி - விஜய் வசந்த்
மேலும், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தவிர்த்து மற்ற 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டி!