ETV Bharat / state

கோவைக்கு மீண்டும் செந்தில் பாலாஜி! 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - SENTHIL BALAJI

தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவரை போன்று மொத்தம் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி
மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 1:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.

வருவாய் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் விவரம்:

வ.எண்மாவட்டம்பொறுப்பு அமைச்சர்கள்
1கோயம்புத்தூர்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
2திருநெல்வேலிநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு
3தேனிஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி
4திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு
5தருமபுரிவேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
6தென்காசிவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
7கன்னியாகுமரி நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
8நீலகிரிதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
9கிருஷ்ணகிரிஉணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி
10காஞ்சிபுரம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி
11பெரம்பலூர்போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
12நாகப்பட்டினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
13மயிலாடுதுறைபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

இதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அண்மையில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹரியானாவில் பாஜக ஆட்சி, ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி - வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.