சென்னை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை பெரம்பூர் எம்ஹெச் சாலையில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மாவட்ட தலைவர் டெல்லி பாபு முன்னிலையில் தொடங்கியது. இந்த நடைபயணமானது எம்கேபி நகர் சாலை வழியே தொடங்கப்பட்டு முத்தமிழ் நகர், பாரதி நகர், வியாசர்பாடி நான்கு வழிச்சாலை எருக்கஞ்சேரி வழியாக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
அப்போது அவர் பேசுகையில், “வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, வட்டாரம், நகரம் முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைவர்கள், வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், கிராம தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கால் படாத இடமே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடைபயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில நிர்வாகிகள் சார்பில், பாதயாத்திரையை தொடங்க இருக்கின்றனர். இந்த பாதயாத்திரை பாதியில் வாகனங்களில் ஏறி செல்வதல்ல, முழுமையான நடைபயணம். மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடிய இளைஞர்களுக்கு இந்த நடைபயணம் விழிப்புணர்வு பிரச்சார பயணமாக வழிவகுக்கும்.
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஜெ. டில்லிபாபு, எம்.சி. அவர்கள் தலைமையில் இன்று சென்னை, கொடுங்கையூர், எம்.ஆர். நகர், ராஜிவ்காந்தி சிலை அருகில் நடைபெற்ற மதநல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.,… pic.twitter.com/8eeA6Qqx6J
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 14, 2024
மேலும், தமிழ்நாட்டில் பாசிச சக்திகளுக்கு இடமில்லாத வகையில் விழிப்புணர்வுக்கான நடைபயணமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணமாக தேசிய ஒற்றுமை பயணம் நிகழ்ச்சி அனைத்து மாநிலங்களும் நடைபெறும். இதில், முதற்கட்டமாக தேசிய மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்து எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சி மாநிலம், அதனால் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்து இருந்தனர். ஆனால் உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலம் அங்கே இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவேங்கடத்தை சுட்டது ஏன்? காவல்துறை விளக்கம்! - Armstrong murder case