ETV Bharat / state

கரூரில் பெரியார் சிலை முன்பு காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்! - பெரியார் சிலை முன்பு திருமணம்

Self - Respect Marriage: கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

self respect marriage at Karur
கரூரில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதலர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 12:04 PM IST

கரூரில் பெரியார் சிலை முன்பு காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்

கரூர்: தோகமலை அருகே உள்ள நாடகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், முதுகலை பட்டதாரி மாரியாயி (24). இவரும், கொசூர் பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி வேல்முருகன்(25) ஆகிய இருவரும், கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், நேற்று (பிப்.8) காலை சுமார் 10 மணியளவில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பெரியாரின் திருவுருவச் சிலைக்கு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு, மக்கள் வழக்கறிஞர் ஜெகதீசன், தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகி சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர், காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும், பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து தஞ்சமடைந்தனர். மேலும், படித்த இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்றளவும் நிலைத்திருப்பதற்கும், பெண்களுக்கான சுயமரியாதை, பகுத்தறிவு உள்ளிட்ட பெரியாரின் சிந்தனைகள் தமிழ்நாட்டில் நீடித்திருப்பதற்கும், இது போன்ற காதல் திருமணங்கள் சுயமரியாதை திருமணங்களாக நடப்பது காலத்தின் அவசியம் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் இந்த சுயமரியாதை திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்த வழக்கறிஞர் ஜெகதீசன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “சுயமரியாதை திருமணத்தின் மூலமாக சமூகத்தில் சாதி ஒழியும் என நம்புகிறோம். தற்போது இந்த தம்பதியின் வீட்டார் தரப்பில் கடுமையான நெருக்கடி, வீட்டிற்குச் சென்று மிரட்டுவது, தம்பதியின் உறவினர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் தருவது போன்ற பல்வேறு மிரட்டலுக்கு உள்ளாகுகின்றனர்.

தற்போது இந்த மிரட்டலுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் மீது காவல் துறையினரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும், இந்த ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சமூகத்தில் இது போன்ற சமூக சீர்திருத்த திருமணங்கள் அதிகளவில் நிகழ வேண்டும்.

சாதி ஒழியட்டும் எனக் கூறி, தற்போது பெரியார் சிலை முன்பு இந்த சுயமரியாதை திருமணம் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இருவருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை... முன்விரோதம் காரணமா? - போலீசார் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.