ETV Bharat / state

அரியலூரில் சத்துணவு சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..

Ariyalur School students: அரியலூர் மாவட்டம் சோழன்குறிச்சி கிராமத்தில், அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் சத்துணவு சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 7:03 AM IST

Updated : Jan 30, 2024, 11:40 AM IST

அரியலூர்: செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜன.29) மதியம் சத்துணவில் வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் சத்துணவு அமைப்பாளர் சபியா பேகம் மற்றும் சமையலர் விமலா ஆகியோர் தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர்.

அரியலூரில் சத்துணவு சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்திருந்த 19 குழந்தைகள் இந்த மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். மதிய உணவு சாப்பிட்டவர்கள் மாலை வீடு திரும்பியவுடன் ஒரு குழந்தைக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஒவ்வொரு குழந்தைகளும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மதியம் சத்துணவு சாப்பிட்ட கவின்(6), பிரதீப்(10), அர்ஜுன்(10), அஜய்(10), சாஜனா(11) சௌந்தர்யா(10), திவ்யா(8), சுபஸ்ரீ(8) ஜெயஸ்ரீ(10), தேவகா(7), கோபிகாஸ்ரீ(7), லட்சயா (8), சபரிவாசன்(9), தீபா(8), பிரித்திகா(10), நாவரசன் (10), அரவிந்த்(7), கவியரசன்(9) ஆகிய 18 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, 19 பேரில் ஒரு குழந்தை மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரியலூரில் டாஸ்மாக் கடையை உடைத்து திருட்டு; 672 மதுபாட்டில்களுடன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

Last Updated : Jan 30, 2024, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.