திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரியில் ராமதாஸ் - அன்புச்செல்வி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதன்ராஜ் என்ற 15 வயது மகன் உள்ளார். பெற்றோர் இருவரும் விவசாயக்கூலி வேலை பார்த்து வரும்நிலையில், மதன்ராஜ் மன்னார்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கோட்டகச்சேரி மாரியம்மன் கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21), சஞ்சய் (19), சித்தார்த்தன் (22) ஆகிய இளைஞர்கள் சேர்ந்து திருவிழா பேனர் வைத்துள்ளனர். அப்போது, அந்த பேனர் மேலே இருக்கும் மின் கம்பி மீது உரசியது. அதை அகற்ற முயன்றபோது, நான்கு பேர் மீதும் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் இளைஞர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மதன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, மதன்ராஜ் நண்பர்களான ரூபன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற இருவர் சிறிய காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இறந்த மதன்ராஜ் உடலை மீட்ட கூத்தாநல்லூர் காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை போக்சோ வழக்கு; பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் சஸ்பண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்..! -