கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (பிப்.01) சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார்.
2017ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அண்மைக் காலமாக இந்த வழக்கு மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான் என்பவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், அதிகாரிகள் முன்பு சயான் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வாறு தொடர்ந்து சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணையானது தற்போது நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக இளைஞரணி மாநாட்டை கிண்டலடித்து பாடிய கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ!