ETV Bharat / state

"தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு; அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாதது" - சத்யபிரதா சாகு கூறுவது என்ன? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Tamil Nadu Chief Electoral Officer: தமிழ்நாட்டில் பிரச்சாரம் முடிந்த பிறகு என்ன செய்யக் கூடாது என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Electoral Officer
Tamil Nadu Chief Electoral Officer
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 3:52 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் ஓரிரு நாட்களில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரச்சாரம் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் 233.விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. யாதொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம்.ரேடியோ, வாட்ஸ்-ஆப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும், யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், தொகுதி வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப்.17 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் ஏப்.17 அன்று மாலை 6.00 மணி முதல் செயல் திறனற்ற ஆகிவிடும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டின் பலத்தை குறைக்கும் மோடியின் சதித் திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.