சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.26) நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள 43 கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைய வழிமுறைகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டிராங் ரூம், இரட்டை பூட்டு முறை அடிப்படையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் சுற்றுப்பகுதி, துணை ராணுவப் படையினரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். இரண்டாவது அடுக்கில் மாநில ஆயுதப்படையினும், வெளி அடுக்கில் மாநிலப் போலீசாரும் இருப்பர். வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் ஸ்டிராங் ரூம்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மணல் குவாரி முறைகேடு; 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் விசாரணை! - Sand Quarry Scam