ETV Bharat / state

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் - சாந்தன் காலமானார்

Santhan passed away: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சென்னையில் இன்று காலமானார்.

Santhan passed away
சாந்தன் காலமானார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 8:34 AM IST

Updated : Feb 28, 2024, 8:53 AM IST

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திர ராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கல்லீரல் பாதிப்பு, கால் வீக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று (பிப்.28) சிகிச்சைப் பலனின்றி காலை 7.50 காலமானார்.

தொடர் கோரிக்கை: கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருந்த சாந்தன், தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் "கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என அதில் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு: மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அம்மனுவில், சமீபகாலமாக தனது உடல் எடை குறைந்து வருவதாகவும், கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் இவர், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் பெற்றப் பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை எனத் தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

விரைவில் அவரின் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்திருந்தார். இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Last Updated : Feb 28, 2024, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.