ETV Bharat / state

பிளாஸ்டிக் மற்றும் செல்போனுக்கு 'நோ'.. சேலம் பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு நடத்தி அசத்தல்! - விழிப்புணர்வு

plastic awareness: பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் மற்றும் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து சேலம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி கலாம் உலக சாதனை படைத்துள்ளனர்.

plastic and cellphone awareness program
பிளாஸ்டிக், செல்போன் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 10:39 PM IST

பிளாஸ்டிக், செல்போன் குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

சேலம்: பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில், குரங்கு சாவடி பகுதியில் உள்ள அரைஸ் மழலைக் குழந்தை பள்ளியின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தூக்கி எறியும் பொழுது அதனை விலங்குகள் எடுத்து உட்கொள்கின்றன. இதனால் விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு நாடகத்தையும் அரங்கேற்றினர்.

தொடர்ந்து செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தின் அடையாளங்களை பதாகைகளாக கழுத்தில் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், பிளாஸ்டிக் வகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாட்டர் பாட்டில் ஆடை, பிளாஸ்டிக் கவர்களால் உருவாக்கப்பட்ட ஆடை, குளிர்பானம் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட ஆடை என பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை அணிந்து பேஷன் ஷோ வடிவில் நடந்து வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . மாணவ மாணவிகளின் இந்த விழிப்புணர்வு அங்கு கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, சுற்று சூழலை பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 6900 சதுர அடி பரப்பளவில் துணி பையை தயாரித்து தனியார் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவி கௌசிகா சுற்று சூழலில் பாதுகாப்பது குறித்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1300 மீட்டர் நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து கலாம் உலக சாதனையை செய்துள்ளார்.

பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலம் மற்றும் மலைப்பகுதிகளில் இது போன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பழைய முறைகளில் துணி பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6900 சதுர அடியில் துணி பையை கைகளால் தைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனையை செய்ததாக அந்த மாணவி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு: சிறப்புக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகத் தமிழக அரசு சென்னை ஐகோர்டில் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.