ETV Bharat / state

பாஜகதான் இந்துக்களின் எதிரி என்பதை அம்பலப்படுத்துவோம் - திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

DMK Youth wing conference: திமுக இளைஞரணி மாநாட்டில், இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவது, பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக இளைஞர் அணியினர் செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திமுக இளைஞரணி மாநாடு
திமுக இளைஞரணி மாநாடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 1:01 PM IST

Updated : Jan 21, 2024, 9:48 PM IST

திமுக இளைஞரணி மாநாடு

சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு இன்று (ஜன.21) நடைபெறுகிறது. இதனையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக துணை பொதுச் செயலாளரும், மகளிர் அணி செயலாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திமுக கொடியேற்றி வைத்தார்.

இதனையடுத்து, மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் உருவச் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில்,

  • தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
  • மத்திய பொதுப் பட்டியலில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  • ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தினை வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரே செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • மேலும், ஆளுநர் பதவி என்பதை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
  • மாநில சுயாட்சி அடிப்படையில், மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
  • அமலாக்கத் துறையின் மூலம் எதிர்கட்சியினரை பழிவாங்கும் போக்கையும், நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் போக்கையும் கண்டிப்பது.
  • நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களிடையே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்வதை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்துக்களின் உண்மையான எதிரி பாரதிய ஜனதா கட்சிதான் என்பதை அம்பலப்படுத்துவது, மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக இளைஞர் அணியினர் செயல்படுவது, நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைப்பது உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்வில், 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் திமுக நிர்வாகிகள் பேச உள்ளனர். இரவு நடைபெறும் நிறைவு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு பாதுகாப்பு பணியில் சேலம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களிலிருந்தும் சுமார் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உளுந்தூர்பேட்டை - சேலம் நெடுஞ்சாலையில், ஆத்தூரில் இருந்து சேலம் வரை மாநாட்டிற்கு அணிவகுத்து வரும் வாகனங்களால், பல மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் ரமேஷ் அறிவிப்பு

Last Updated : Jan 21, 2024, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.