ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை, கஞ்சா விற்பனை! பிரபல ரவுடி கைது - Sothuppani Manikandan Arrested

Rowdy Sothuppani Manikandan Arrested: சென்னை சைதாப்பேட்டையை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சோத்துப்பானை மணிகண்டன் இரண்டு கொலை மற்றும் 25 கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் மற்றும் ரவுடி கலிதீர்த்தபெருமாள்
ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் மற்றும் ரவுடி கலிதீர்த்தபெருமாள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:22 PM IST

சென்னை: சென்னையை அடுத்த சேலையூர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என பல்வேறு காவல் நிலையங்களில், இரண்டு கொலை மற்றும் 25 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சோத்துப்பானை மணிகண்டன்(33)எ ன்னும் பிரபல ரவுடி இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை ஆசாமி கைது: இதனைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர் நகர், மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பள்ளி ஒன்றின் அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி ஆட்டோவில் அமர்ந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கணேசன்(37), விக்ரம்(28), விஷ்வா(21)சஞ்சய்(22) மற்றும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த கலிதீர்த்தபெருமாள்(26) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களது ஆட்டோவில் போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள் பதுக்கி வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 375 சிரஞ்சுகள் மற்றும் 60 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வந்த கலிதீர்த்தபெருமாள், காதல் தோல்வியால் விரக்தி அடைந்து, போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக போதை மாத்திரைகளை வாங்கி வந்து, அதை கரைத்து ஊசி மூலம் தினசரி உடலில் செலுத்திக் கொள்வதுடன் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் கூறப்படுகிறது

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தூக்க மாத்திரையை தவறுதலாக விழுங்கி குழந்தை மரணம்.. வேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.