ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு ஜூன் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு! - Lok Sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 1:50 PM IST

VVPAT Machine: நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

Case against EVM and VVPAT machine
Case against EVM and VVPAT machine

சென்னை: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்த இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "சமீப காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது. வாக்குபதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் (control unit), வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் (ballot unit) இடையில் அச்சு இயந்திரம் (VVPAT) வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டை எண்ணுவது குறித்து தேர்தல் அதிகாரி முடிவெடுக்க அதிகாரம் உள்ள போதும், அதுசம்பந்தமான விதிகள் ஏதும் இல்லை" என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளதேன்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இதனிடையே, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், "மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த தேர்தலில் மனுதாரர் கட்சி வெற்றி பெற்றதாகவும், இந்த வழக்கை ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதைய தேர்தலுக்காக இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை பின்னர் பரிசீலிக்கலாம் எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் 25ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு: ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.