ETV Bharat / state

சென்னையில் கைதிகளை விடுவிக்கக் கோரி அரசு மருத்துவமனையில் ரவுடிகள் அட்டகாசம்! - Rowdy atrocities in Chennai - ROWDY ATROCITIES IN CHENNAI

Rowdy atrocities in Chennai: சென்னையில், போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, அவருக்கு ஆதரவாக ரவுடி கும்பல் மருத்துவமனை வளாகத்தில் சூறையாடிய ரவுடிகளின் நண்பர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சேதமடைந்த ராயப்பேட்டை மருத்துவமனை
சேதமடைந்த ராயப்பேட்டை மருத்துவமனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 10:19 PM IST

சென்னை: போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் சென்னை அபிராமபுரம் போலீசார் மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மந்தவெளியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகிய மூன்று பேர் நேற்றிரவு (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உடல் நலத் தகுதி சான்று பெறுவதற்காக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின், ஆதரவாளர்கள் என ஒரு திருநங்கை உட்பட ஐந்து பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போது, கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறியும், இல்லை என்றால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி தங்களை தாங்களே காயப்படுத்தியுள்ளனர். இதனிடையே, அங்கிருந்தவர்கள் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது, திருநங்கை உள்ளிட்ட ரவுடி கும்பல் மருத்துவமனை வளாகத்திலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர்.

இதையும் படிங்க: தஞ்சையில் பட்டப்பகலில் தொழிலதிபர் கொடூர கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

அதில், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த கண்ணாடிகள், நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் கருவிகள், கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு அராஜகம் செய்துள்ளனர். இதனையடுத்து, ரவுடி கும்பலின் அராஜகம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரவுடி கும்பல் மருத்துவமனையை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியது. இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையைச் சூறையாடிய போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு போலீசார் இருக்கும் போதே, கைது செய்யப்பட்ட ரவுடிகளுக்காக அவர்களின் நண்பர்கள் எனக் கூறிக் கொண்டு மருத்துவமனையைச் சூறையாடிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாளவாடி அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 6 பழங்குடியினர் உயிரிழப்பு.. தொடரும் மர்மம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.