ETV Bharat / state

“கூலிப்படையால் தன்னைத்தானே வெட்டியுள்ளார்" - ரோக்கேஷின் மனைவி பரபரப்பு பேட்டி! - Rokkesh Murder Attempt Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 7:44 PM IST

Rokkesh Wife Dhivya Byte: கும்பகோணம் அருகே திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளம்பெண் கணவனைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், தனது கணவரே ஆட்களை வைத்து தன்னை வெட்டியுள்ளார் என்று சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோக்கேஷ்,திவ்யா
ரோக்கேஷ் மற்றும் திவ்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் ஏகேவி நகரில் வசித்து வருபவர் ரோக்கேஷ் (43). இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும் கும்பகோணம் பழைய அரண்மனைத் தெருவைச் சேர்ந்த திவ்யா (35) என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

ரோக்கேஷின் மனைவி திவ்யா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது இவர்களுக்கு 6 வயது மகள் உள்ளார். ரோக்கேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், திவ்யா சிறுக சிறுக சுமார் 200 சவரன் தங்க நகைகளை கணவரிடமிருந்து வாங்கியதாகவும், கணவர் ரோக்கேஷ் அனுப்பிய சுமார் 2 கோடி ரூபாய் பணத்தில் திவ்யா, தனது பெயரிலும், தனது பெற்றோர் பெயரிலும் சொத்துக்களாக வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருடன் திவ்யாவிற்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கணவர் ரோக்கேஷிடம் விவாகரத்து கோரியுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு திவ்யாவிற்கும், நந்தகுமாருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் திவ்யாவின் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் சான்றாக ரோக்கேஷ் வைத்துக் கொண்டுள்ளதால், தன்னிடம் உள்ள சொத்துக்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அஞ்சிய திவ்யா, கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி இரவு நந்தகுமார் உள்ளிட்ட சிலர், ரோக்கேஷை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரோக்கேஷ் தற்போது கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கும்பகோணம் கிழக்கு போலீசார், நந்தகுமார் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், திவ்யா இன்று (ஜூலை 5) நண்பகல் கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசனை நேரில் சந்தித்து ரோக்கேஷ் குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது பேசிய திவ்யா, "ரோக்கேஷ் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக, ஒருதரப்பில் மட்டும் விசாரித்துவிட்டு என் தரப்பில் விசாரிக்காதது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பலதரப்பிலும் என்னைப் பற்றி தவறாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால், அது எதுவும் உண்மை கிடையாது. ரோக்கேஷின் கொலை முயற்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரோக்கேஷ் அவராக திட்டமிட்டு, ஆட்களை வைத்து தன்னை வெட்டியுள்ளார். அப்படி செய்தால் மட்டும்தான் என்னை கைது செய்ய முடியும் என்று அப்படி செய்துள்ளார்.

இதற்காக அவர் கூலிப்படைகளிடம் பணம் கொடுத்துள்ளார். அதற்கான ஆதாரமாக ரோக்கேஷின் வங்கி பரிவர்த்தனை என்னிடம் உள்ளது. மேலும், எனக்கு எந்தவொரு நகையும் அவர் வாங்கி கொடுக்கவில்லை. இரண்டாவது குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் நந்தகுமார் பெயர் உள்ளது உண்மைதான். எங்களது விவாகரத்து வழக்கு தீர்ப்பானது நந்தகுமாரை திருமணம் செய்துகொள்ளபோகிறேன் என்றுதான் விவாகரத்து வழக்கையே பதிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காருக்குள் கஞ்சா குடோன்.. ஷாக்கான போலீஸ்.. நாகையில் பரபரப்பு சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.