ETV Bharat / state

மீட்புப்பணிகள் முடிந்து கவரைப்பேட்டை வழியாக மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!

கவரைப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முடிந்து இன்று ரயில்கள் சென்னை நோக்கி இயக்கப்பட்டு வருகின்றன.

கவரைப்பேட்டை வழியாக இயக்கப்பட்ட ரயில் என்ஜின்
கவரைப்பேட்டை வழியாக இயக்கப்பட்ட ரயில் என்ஜின் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 1:04 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.லேசான காயங்களுடன் 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதித்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயிலில் பயணம் செய்த 1500க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு சிறப்பு ரயில் மூலம் பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தர்பாங்காவிற்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

2வது மார்க்கத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் தடம் புரண்ட பெட்டிகளில் 9 பெட்டிகள் ராட்சத க்ரைன் உதவியுடன் அகற்றப்பட்ட நிலையில், போர்க்கால அடிப்படையில் மீதமுள்ள 13 பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை 11 ரயில் பெட்டிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணிகளும், மின்சார வயர் சீர் அமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.

இதையும் படிங்க: தொடங்கிய ரயில் சேவை; கவரைப்பேட்டை வழியாக வெற்றிகரமாக ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

சென்னைக்கு செல்லக்கூடிய அப்ளைனில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ச்சியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சென்னை செல்லும் பாதையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகு நிஜாமுதீனிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்ற கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை முதல் ரயிலாக கடந்து சென்றது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த ரயில்கள் சென்னை நோக்கி செல்லத் தொடங்கின.

சென்னையில் இருந்து வரக்கூடிய மற்றொரு பாதையை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.