ETV Bharat / state

அறிக்கை ரெடி... நெல்லை விரையும் ஐஜி... ஜெயக்குமார் வழக்கில் அடுத்தது என்ன? - jayakumar case Report

jayakumar case Report: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் அனைத்தும் நெல்லை மாவட்ட காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

file pic
file pic (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 1:29 PM IST

திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கேபிகே ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. ஜெயக்குமார் மரண வழக்கில் கடிதங்கள் உட்பட சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தும்கூட ஜெயகுமாருக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. அந்த கடிதங்களில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. எனினும் இவ்வழக்கை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நெல்லை எஸ்பி சிலம்பரசனே ஜெயக்குமார் வீட்டு பகுதியில் முகாமிட்டு ஜெயக்குமாரின் மனைவி, இரு மகன்கள், மகள், மருமகன் என குடும்பதினர் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். ஆனாலும், ஜெயக்குமார் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை.

பெண்ணுடன் தொடர்பு: தொழில் விவகாரம், அரசியல் விவகாரம், பெண் விவகாரம் என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் பலனளிக்கவில்லை. குறிப்பாக, ஜெயக்குமாருக்கு திசையன்விளை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரிய வந்தது. அந்தப் பெண்ணையும் போலீசார் நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் ' 'ஜெயகுமாருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான். ஆனால் அவரது கொலை பற்றி எதுவும் தெரியாது'' என கூறிவிட்டார்.

பாத்திரம் கழுவும் பிரஷ்: ஆனால், ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டும், வயிற்றில் கடப்பாக்கல் கட்டப்பட்டும் எரிக்கப்பட்டிருந்தது. மேலும், வாயில் பாத்திரம் கழுவும் பிரஷ் திணிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயக்குமாரின் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், உடல் கிடந்த இடத்தில் மீட்கப்பட்ட தடயங்கள் அனைத்தும் உள்ளுர் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து வந்த சிறப்பு தடய அறிவியல் குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

டார்ச்லைட்: இந்நிலையில், உடல் கிடந்த இடத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் 'டார்ச்லைட்' முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட 2ம் தேதி இரவு 10.30 மணியளவில் அவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. ஒருவேளை போலீசாருக்கு கிடைத்துள்ள டார்ச்லைட்டை அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்துதான் ஜெயக்குமார் வாங்கினாரா என்பதையும் தடய அறிவியல் துறை மூலம் போலீசார் ஆய்வு செய்தனர்.

அறிக்கைகள் தயார்: மேலும், கைப்பற்றப்பட்டது ஜெயக்குமார் உடல்தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக ஜெயக்குமார் மகனின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, ஜெயக்குமார் உடல் எலும்புகள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில், ஜெயக்குமார் வழக்கில் உடற்கூறாய்வு வல்லுநர் குழு அறிக்கை, தடய அறிவியல் துறையின் சிறப்பு குழு அறிக்கை உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளின் முடிவுகளும் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஐஜி கண்ணன்: எனவே, இந்த அறிக்கையில் ஜெயக்குமார் எப்படி உயிரிழந்தார் என்ற விவரம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அறிக்கை மிக ரகசியமாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று நெல்லை வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனை சந்தித்து ஜெயக்குமார் வழக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து. அவர் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளம்பெண் கூறிய தகவல்... ஜெயக்குமார் வழக்கில் அரசியல் தலையீடு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.