ETV Bharat / state

இத கவனிச்சீங்களா..? அதிமுக - பாஜக வாக்குகளை சேர்த்தாலும் தோல்விதான்.. வட சென்னை தொகுதியில் நடந்தது என்ன? - north chennai lok sabha constituency

North Chennai parliamentary results: வட சென்னையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இரு கட்சிகளின் வாக்குகளை இணைத்து பார்த்தாலும் கூட, திமுக பெற்ற வாக்குகளே அதிகமாக இருப்பது வடசென்னை தொகுதி திமுகவின் முழு கோட்டையாக மாறியிருப்பதை காட்டுகிறது.

கலாநிதி வீராசாமி - ராயபுரம் மனோ
கலாநிதி வீராசாமி - ராயபுரம் மனோ (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 3:26 PM IST

சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தாண்டி இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும்.

இத்தொகுதி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், எளியவர்கள் மற்றும் தினக்கூலிகளிகளைக் கொண்ட பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கியுள்ளது. வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாநிதி வீராசாமி தான் தற்போதும் வேட்பாளாராக களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் 63.48 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த முறையை விட தற்போது 3.35 சதவீத வாக்குப்பதிவு குறைந்துள்ளது தெரிகிறது.

அதேபோல, வட சென்னையில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி கடந்த 2019ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்த தேர்தலிலும் அவர் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டால், கடந்த முறையை விட தற்போது குறைவாகவே உள்ளது.

கடந்த முறை வட சென்னை தொகுதியில் 5,90,986 வாக்குகளைப் பெற்ற கலாநிதி வீராசாமி, தற்போது 4,97,333 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கலாநிதி வீராசாமிக்கு எதிராக முக்கியமானவர்களாக அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகள் பெற்று 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக சார்பில் போட்டியிட்ட ராயபுரம் மனோ 1,58,111 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக பாஜக 1,13,318 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 95,954 வாக்குகளும் பெற்றுள்ளது.

வட சென்னையில் திமுக வெற்றி பெற்றதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தோம் என்றால், வட சென்னை திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை பெருவெள்ளத்தின் போது திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதி, வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால் முதல்வரின் பல்வேறு திட்டங்கள் வட சென்னை மக்களுக்கு எளிதாகச் சென்று கிடைக்கிறது. திமுகவின் நேரடி எதிர்க்கட்சியாக அதிமுகவாக இருந்தாலும், இந்த தேர்தலில் முழுமையாக பாஜகவிற்கு எதிராகவே திமுகவின் பிரச்சார யுக்தி இருந்தது.

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிமுகவிற்கு செல்லவிடாமல் திமுக தனதாக்கி கொண்டது திமுக வெற்றி பெற்றதற்கான காரணங்களாகும். அதிமுக தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ராயபுரம் மனோ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார்.

இவரை வட சென்னை தொகுதியின் வேட்பாளராக அதிமுக அறிவித்தது. வேட்பாளாரக அதிமுக ராயபுரம் மனோவை அறிவித்தாலும், கட்சியின் உள்ளே பெரிய அளவில் அவருக்கு ஒத்துழைப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. பிரச்சாரத்தில் முழுமையாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபடவில்லை என்பது மனோவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

திமுகவில் சொல்லும்படியான தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர்களும், பெரும் தலைவர்கள் யாரும் வட சென்னையில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்காததும் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

வட சென்னையில் அதிமுக - பாஜக இரு கட்சிகளின் வாக்குகளை இணைத்து பார்த்தாலும் கூட திமுக பெற்ற வாக்குகளை விட அதிகமாகவில்லை. அதிமுக - பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்து இருந்தாலும் கூட, வட சென்னையில் திமுகவே வெற்றி பெற்றிருக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க: மக்களவைத தேர்தல் 2024: தென்சென்னை தொகுதியில் திமுக வெற்றி... அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.