ETV Bharat / state

போதைப்பொருளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக முதலமைச்சர் முன்வருவாரா? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி! - drug issue in tamil nadu - DRUG ISSUE IN TAMIL NADU

R.B.Udhayakumar: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற போதைப்பொருள் நாசக்கார சக்தியை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் முன் வருவாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் புகைப்படம்
ஆர்.பி.உதயகுமார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 7:42 PM IST

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதை எப்படி கையாளுகிறது என்ற விவாதம் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக எடுத்துக் கூறியும் கூட, இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. திமுகவின் உறுப்பினராக இருந்த நபர் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் போதைப்பொருள்கள் கடத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இன்றைக்கு கூட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்த முயன்றபோது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்கால இளைஞர் சமுதாயத்தை போதையின் பாதையிலிருந்து மீட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பது போல, அரசுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை திமுக அரசு உணர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஆகவே, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வருமா? என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப்பொருள்களின் பயன்பாடு மனதையும், உடலையும் பாழ் படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுடைய எதிர்காலத்தையே சீரழித்து விடுகிறது. அதனால் தான் போதைப்பொருள் கடத்தலை பெரும் குற்றமாகக் கருதி கடுமையான தண்டனை சட்டத்தில் விதிக்கக்கூடிய நிலை இருக்கிறது. மேலும் கஞ்சா, அபின், கொக்கின் என போதைப்பொருள்களில் பல ரகங்கள் இருந்தாலும் மாத்திரை வடிவிலும், போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கிறோம்.

ஆகவே, இளைஞர்களை பேரழிவிற்கு இழுத்துச் செல்லும் போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். மேலும், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் இன்று அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்பொழுது போதைப்பொருள் நடமாட்டம் அறவே இல்லை முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பேசியது அவர் வைத்திருக்கிற கோரிக்கையா? கட்டளையா, உத்தரவா, அறிவுரையா? என தெரியவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போதைப்பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்தாலும், இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா என வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான பல குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுவரை தமிழக அரசியலில் வரலாறு காணாத வகையில் போதைப்பொருள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது என்பதையே காட்டுகிறது.

மாணவர்கள், இளைஞர்கள் என ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை சீரழிக்கின்ற போதைப்பொருள் நாசக்கார சக்தியை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முன் வருவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மருமகனை கொல்ல கூலிப் படை அனுப்பிய மாமனார்.. உயிருக்கு போராடும் இளைஞர்.. காதல் திருமண பின்னணி..! - tiruvannamalai murder attempt

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.