ETV Bharat / state

ரூ.80 கட்டணத்தில் ராமேஸ்வரத்தில் 9 இடங்களை சுற்றி பார்க்கலாம்.. புதிய பேருந்துகள் அறிமுகம்!

rameswaram tourist bus: ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக 80 ரூபாய் கட்டணத்தில் 9 இடங்களைச் சுற்றிப் பார்க்க 5 புதிய சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 12:39 PM IST

இராமநாதபுரம்: ஆன்மிக தளத்திற்குப் பெயர்போன ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.

அப்படி வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வதற்காக ஆட்டோ மற்றும் வாடகை கார் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலவு செய்யக்கூடிய நிலையில் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இதில், 80 ரூபாய் மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதும், இந்த பேருந்தானது அக்னி தீர்த்த கடற்கரை, ராமர் பாதம், ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம், லட்சுமணன் தீர்த்தம், கலாம் இல்லம், கலாம் நினைவகம் உள்ளிட்ட 9 பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம்.

இந்த பேருந்துகளில் ஒரு முறை 80 ரூபாய் கட்டணம் செலுத்தி, பயண அட்டை எடுத்து கொண்டால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழர்களை தவறாக சித்தரிக்கிறதா மஞ்சுமல் பாய்ஸ்? - வசனகர்த்தா பிரத்யேக பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.