ETV Bharat / state

சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம் என ராமதாஸ் சாடல்! - Katchatheevu Issue - KATCHATHEEVU ISSUE

Katchatheevu Issue: இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 12:29 PM IST

சென்னை: கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம் என்றும், அதை நியாயப்படுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம். இதை 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வாக எண்ணி, கடந்து சென்று விட முடியாது. அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை, நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 184 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் முழு காரணம். எனவே, இதற்கு காரணமானவர்களை எக்காலத்திலும் மன்னிக்க முடியாது.

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் முடிவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது, தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான திமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, அதற்கு தெரிந்தே அனுமதித்தார். அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து, கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி இலங்கையிலும், 28ஆம் தேதி டெல்லியிலும் கையெழுத்திடப்பட்டது. ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக மக்களிடன் காட்டிக் கொள்வதற்காக, கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மறுநாள் (ஜூன் 29), அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்.

அதன்பின், ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக சட்டசபையில், கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவு இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு, பல காரணங்கள் உள்ளன. அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தது.

எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் மத்திய அரசிடம் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை அளித்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், கலைஞர் அரசை (திமுக) எந்த நேரமும் கலைத்து விட்டு, ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக மத்திய அரசு திமுகவை மிரட்டி வந்தது. அந்த மிரட்டலுக்கு பயந்து தான், கலைஞர் மௌனமாக இருந்ததாக அப்போதே பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை, இப்போதும் காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். மறுபுறம், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக, இப்போதும் திமுக கூறி வருகிறது. இந்த சிக்கலில், திமுக மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடுகள் முரண்பாடாக உள்ளது. காங்கிரஸ் அரசால், மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வி உள்ளிட்ட பிற அதிகாரங்கள் அனைத்தும், பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

நெருக்கடி நிலையானது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். இப்படி பல விவகாரங்களில், திமுக - காங்கிரசின் நிலைப்பாடுகள், முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளது. ஆனாலும், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரஸுடன், திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே நடந்தது என்ன? - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கம் - Kachchatheevu Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.