ETV Bharat / state

ரஜினிகாந்த் - சசிகலா சந்திப்பு; அரசியல் பேச விரும்பவில்லை என பேட்டி! - Rajinikanth Sasikala meet

Actor Rajinikanth Visit Sasikala New House: வி.கே.சசிகலா போயஸ்கார்டனில் கட்டிய புதிய வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை புரிந்து சசிகலாவைச் சந்தித்துப் பேசினார்.

Actor Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 1:31 PM IST

சென்னை: சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்திற்கு எதிரே, வி.கே.சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில், சசிகலா நேற்று (பிப்.24) புதிய வீட்டில் குடியேறினார்.

போயஸ்கார்டன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை புரிந்து, சசிகலாவைச் சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இன்றைய சந்திப்பின் முக்கியத்துவம் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. வீடு கோயில் போல உள்ளது. சசிகலாக்கு பெயர், புகழ், நிம்மதி ஆகியவற்றை இந்த வீடு வழங்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடத்தை பூர்த்தி செய்ய தமிழகத்தில் யார் உள்ளார்கள் என்ற கேள்விக்கு, "அரசியல் பேச விரும்பவில்லை. மேலும், தனது அடுத்த படத்திற்கான வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக” ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது' - ராமதாஸ் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.