ETV Bharat / state

சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்! - உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக கோ- வாரண்டோ நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 2:50 PM IST

சென்னை: சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார்.

திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள்? என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம், அதில் யாரும் தலையிட முடியாது. அனைத்து மக்களின் பிரதிநிதியாக உள்ள அமைச்சர்கள் ஒருதலைபட்சதாக செயல்பட கூடாது.

அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது, யாருக்கும் ஆதாரவாகவும்? எதிராகவும்? செயல்பட மாட்டோம் என உறுதி அளித்தனர். பதவிப் பிரமாண உறுதியை மீறிய அமைச்சர்களை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. உதயநிதி மற்றும் சேகர்பாபு சார்பில், சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவோம் என பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.

அதன்படி, குறிப்பிட்ட சமுதாய மக்கள் நசுக்கப்படும் போது அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களின் பொறுப்பு. சனாதனம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தினர் உயர்ந்தும், மற்றவர்கள் தாழ்ந்தும் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

எல்லாருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். அதை தெரிவிக்கவும், உரிமையை பெற்றுத்தரவும் அரசுக்கு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு குறிப்பிட்ட மதத்தின் உரிமைகள் மட்டும் பேசவில்லை, அதனால் பாதிக்கப்படுபவர்களின் உரிமை பெறவும் கூறுகிறது. அதற்காக போராடவும் அனுமதி வழங்குகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தின் உரிமை பற்றி மட்டுமே பேச வேண்டும் என கூறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2023 நவம்பர் 23ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று (மார்ச்.6) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், சர்ச்சையான கருத்துக்களை கூறும் அமைச்சர்கள் என்ன அடிப்படையில் அந்த பதவியில் தொடர்கிறார்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : சனாதன விகாரம் - அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.