புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | வைத்திலிங்கம் | காங்கிரஸ் | 4,26,005 |
2 | நமச்சிவாயம் | பாஜக | 2,89,489 |
3 | மேனகா | நாதக | 39,603 |
4 | தமிழ்வேந்தன் | அதிமுக | 25,165 |
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 2,35,392 வாக்குகளும், பாஜக சார்பில் இருக்கும் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 1,76,780 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா 22,322 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 13,107 வாக்குகளும் பெற்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட 58,612 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 04.05 PM நிலவரம்.
- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 1,82,924 வாக்குகளும், பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 142610 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா 16546 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 10359 வாக்குகளும் பெற்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட 40314 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 02.58 PM நிலவரம்.
- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 1,48,779 வாக்குகளும், பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 117005 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மேனகா 13912 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 7822 வாக்குகளும் பெற்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட 31774 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 12.55 PM நிலவரம்.
- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 1,13,472 வாக்குகளும், பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 83438 வாக்குகள் பெற்றனர். - 11.18 AM
- புதுச்சேரியில் முதல் சுற்றில் பாஜக முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கரஸ் முன்னிலையில் உள்ளது - 10.34 AM
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட்டிருந்தார். பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சார்பில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா ஆகியோர் களம் இறங்கினர்.
2019 தேர்தல் நிலவரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வெ.வைத்திலிங்கம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 981 அதாவது 56.27% வாக்குகளை பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் நாராயணசாமி 2 லட்சத்து 47 ஆயிரத்து 956 வாக்குகள் அதாவது 31.36% சதவீத வாக்குகளை பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 025 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மொத்தம் 80.3 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், இந்த முறை இத்தொகுதியில் 78.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதுவரை இங்கு நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில், 11 முறை வென்று புதுச்சேரியை தமது கோட்டையாக தக்கவைத்து கொண்டுள்ளது காங்கிரஸ். இந்த முறை பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக பலம் வாய்ந்த கூட்டணி கட்சிகளாக கருதப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் உள்ளார்.