ETV Bharat / state

'நல்லவனுக்கு நல்லவன்' ரஜினி பாணியில் சிறைக்கைதி டூ ஓவியர்.. கோவை கலைஞரின் சொல்லியடித்த வளர்ச்சி! - Kovai Artist - KOVAI ARTIST

Coimbatore Artist: கோவை மத்திய சிறையில் தனது கலை குறித்த வாழ்க்கை பயணத்தை துவக்கி 15 வருடங்களில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய ஓவியக் கலைஞரின் கலைப் பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஓவியர் ராஜ்குமார், அவர் வடிவமைத்த சிலைகளின் புகைப்படம்
ஓவியர் ராஜ்குமார், அவர் வடிவமைத்த சிலைகளின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 3:02 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜ்குமார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த நபரிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர், குடும்பச் சூழல் காரணமாக அதனை மற்றொருவருக்கு விற்ற நிலையில், வாகனப் பதிவின்போது வாகனத்தின் உரிமையாளர் வேறொருவர் என்பதும், ராஜ்குமார் எந்த ஆவணமும் இன்றி வாகனத்தை வாங்கியதும் தெரிய வந்துள்ளது.

சிறையில் கற்ற கலை: இதனால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ்குமார், சிறையில் சிறு சிறு ஓவியங்களை வரைந்து வந்துள்ளார். ராஜ்குமாரின் திறமையைப் பார்த்த மத்திய சிறை கண்காணிப்பாளர் அவரை ஊக்குவித்தும் வந்துள்ளார். பின்னர், 4 மாதங்களில் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஓவியர் ராஜ்குமார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சுவரோவியம் வரைய வாய்ப்பு: இதனையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சீனிவாசலு, அப்போது நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், சுவர் ஓவியங்கள் வரைவதற்கு ராஜ்குமாருக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இந்த மாநாட்டில், ராஜ்குமார் தனது ஓவியத் திறமையை வித்தியாசமாகவும், அழகாகவும் வெளிபடுத்தி சிறப்பான ஓவியங்களை வரைந்துள்ளார்.

15 ஆண்டு கால வளர்ச்சி: ராஜ்குமாரின் ஓவியத் திறமையை அறிந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிறையில் இருந்து வந்தவருக்கு மறுவாழ்வு அளிக்க எண்ணி, அவர்களுடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ராஜ்குமாரை வைத்து முகப்புகள் அமைத்தனர். மேலும், குடியிருப்புகளில் பல்வேறு சுவர் ஓவியங்களும், யானை, குதிரை, உள்ளிட்ட சிலைகளும் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதனை நன்கு பயன்படுத்திய ராஜ்குமார் 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளார். கோவை நகரில் உள்ள பல்வேறு கட்டிடங்களுக்கு இவர் சுவர் ஓவியங்களும், சிலைகளும் செய்து கொடுத்து வருகின்றார்.

ராஜ்குமார் வடிவமைத்த சிலைகளின் புகைப்படம்
ராஜ்குமார் வடிவமைத்த சிலைகளின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் அமைக்கும் பணியும், அதனைச் சுற்றி இரு புறங்களிலும் சிலைகள் வடிவமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஒப்பந்தம் செய்த தனியார் கட்டுமான நிறுவனம், சிலைகள் அமைக்க ராஜ்குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ராஜ்குமார் தனது பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலைகளை வடிவமைத்து வருகிறார்.

இது குறித்து ராஜ்குமார் கூறுகையில், “நான்கு மாதங்கள் சிறையில் இருந்த போது கடும் மன உளைச்சலில் இருந்தேன். சிறையில் கிடைத்த கரித் துண்டுகள் மற்றும் பென்சில்களைக் கொண்டு சுவரில் ஓவியங்கள் வரைந்ததைப் பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், தன்னை மேலும் ஊக்குவித்ததால் முழு கவனத்தையும் ஓவியம் வரைவதில் காட்டினேன்.

சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் பல்வேறு இடங்களில் சுவர் ஓவியம் வரைந்தேன். என்னைப் பற்றி அறிந்த தனியார் கட்டுமான நிறுவனம் சிலைகள் வடிவமைக்க எனக்கு வாய்ப்பளித்தது. என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கொடுத்த பணிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்ததால், அடுத்தடுத்து தனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது கோவையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களில் உள்ள முகப்புகள் நான் வடிவமைத்தது.

2009-ல் தான் செய்த சிறு தவறினால் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்படும் என உணர்ந்த நிலையில், எனக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. பொதுவாக சிறைக்குச் செல்பவர்கள் மனம் திருந்தி வர வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், சிறைக்குச் சென்றவுடன் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளாமல், சிறையில் உள்ளவர்களின் தவறான வழிகாட்டுதலால் மேலும் தவறுகளைச் செய்கின்றனர்.

அந்த வகையில், சிறையில் தனக்கு நல்வழி கிடைத்ததால் இந்த முன்னேற்றம் என் வாழ்வில் ஏற்பட்டுள்ளது. சொந்தமாக வீடு கட்டி வருகிறேன். கட்டிடம் கட்டுவதில் தனக்கு ஆர்வம் உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால், அதனை செயல்படுத்த முடியாத நிலையில், தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் எனது மூத்த மகன் ஆர்க்கி டெக் (Architect) எனப்படும் கட்டிடக் கலை பயின்று வருகிறான்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: Fact Check; காங்கிரஸை புகழ்ந்து பேசினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்? உண்மை என்ன? - Mohan Bhagwat Praising Congress

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.