ETV Bharat / state

நாளை முதல் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்!

Practical exam: பொதுத்தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் 29ஆம் தேதி வரையில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

நாளை முதல் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 4:08 PM IST

Updated : Feb 11, 2024, 4:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ஆம் வகுப்பிற்கு நாளை (பிப்.12) முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்திட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.

அதன் அடிப்படையில், செய்முறைத் தேர்வினை நடத்துவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி, சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முதல் சுற்று பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 2ஆம் சுற்று பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் 2 சுற்றுக்களாக நடைபெறுகிறது.

செய்முறைத் தேர்வினை அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ள வழிகாட்டுதல்படி, எந்த விதமான புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தப்பட வேண்டும். செய்முறைத் தேர்விற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in/ என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் தாமதம் கூடாது. இதனால் பின் விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவர்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, செய்முறைத் தேர்வினை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 பிரிவுகளாக நடத்தலாம். ஒரு பாடத்தில் செய்முறைத் தேர்விற்கான மாணவர்களின் எண்ணிக்கை 120க்கு கீழே இருந்தால், அவர்களுக்கு ஒரே நாளில் செய்து முடிக்கப்பட வேண்டும்.

செய்முறைத் தேர்வில் அளிக்கப்படும் அக மற்றும் புறத்தேர்வு மதிப்பெண்களை, எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. புறத் தேர்விற்கு வராத மாணவர்களுக்கு அக மதிப்பெண்கள் இருந்தால் வழங்க வேண்டும். அக மதிப்பெண்கள் இல்லாவிட்டால், வரவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தேர்வர்களின் வருகைச் சான்றிதழ், அந்தந்த மையங்களில் பாதுகாக்கப்பட வேண்டும். மதிப்பெண் பட்டியில் கடந்தாண்டு, அகமதிப்பெண்கள் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், புற மதிப்பெண்கள் மற்றும் மொத்த மதிப்பெண்கள் பதிவிடப்படவில்லை. மதிப்பெண் பட்டியலில் தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் கையெழுத்து விடப்பட்டிருந்தன. எனவே, செய்முறைத் தேர்வினை எந்தவித புகாரும் இன்றி நடத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளியின் முதல்வர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்: போராட்ட தேதி மாற்றம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

Last Updated : Feb 11, 2024, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.